பொதுமக்கள் சரமாரி கேள்வி - சிறு கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் சிறு கிணறு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சமை கூட்டத்தில் கிராம மக்கள் சரமாரி கேள்வி கேட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


திருப்பூர்: டாஸ்மார்க் கடை அப்புறப்படுத்த ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி கேட்டதால் கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஊராட்சி மன்றத் தலைவர் கிளம்பிச் சென்றார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடத்தை அடுத்துள்ள சிறு கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டால் மட்டுமே கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இந்நிலையில் கிராமத்தில் உட்பட்டவர்களை கிராம சபை கூட்டத்திற்கு வந்திருக்கின்றனர்.

ஆனால், 50க்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து நொச்சிப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று தலைவர் செல்லமுத்துவிடும் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

டாஸ்மார்க் கடை அப்புறப்படுத்த ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்டனர். அதேபோன்று அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை, தார் சாலை, தெரு விளக்கு, குப்பை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்வதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதில் கூற முடியாத ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து கூட்டத்திலிருந்து பாதியிலேயே இருந்து சென்றார். அதன் பின் அதிகாரிகள் போதிய அளவு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காலதால் கிராம சபை கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...