முன்னறிவிப்பின்றி இடமாற்றம் செய்யப்பட்ட உடுமலை தபால் நிலையம் - பொதுமக்கள் முற்றுகை

உடுமலையில் இயங்கிவந்த தபால் நிலையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் உள்ள தபால் அலுவலகம் இட மாற்றம் செய்ய பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட எரிப்பாளையம் வீஜிராவ் நகர் பகுதியில் கடந்த 42 ஆண்டுகளாக இயங்கி வந்த தபால் நிலையம் எந்தவித முன்னறிவிப்பின்றி இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அய்யலுமீனாட்சி மீனாட்சி நகருக்குஇடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



இதற்கிடையில் தபால் நிலையத்தை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை தலைமை தபால் நிலையத்தை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீஜிராவ் நகர் தபால் நிலையத்தில் சுமார் 2000 பேர் நிரந்தரக் கணக்கு 1300 க்கு மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு 5000 பேர் டெபாசிட் செய்திருப்பதாகவும் மாதத்திற்கு ஒரு கோடிக்கு மேல் பணம் வர்த்தகம் நடைபெறும் நிலையில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் தபால் நிலையத்தில் ஓய்வு ஊதியர்கள் வயது முதிர்ந்தவர்கள் அதிக அளவு கணக்கு வைத்து உள்ள நிலையில் தற்பொழுது இரண்டு கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டியுள்ளது எனவே தபால் நிலையத்தை மீண்டும் இதே பகுதியில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தபால் துறை அதிகாரிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது தங்களது கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்ததால் தற்காலிகமாக பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். உடுமலை தலைமை தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுமலை பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...