உடுமலையில் அறிவியல் கருத்தரங்கம் மற்றும் செயல் விளக்க பயிற்சி முகாம்

உடுமலை அடுத்துள்ள முக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக அறிவியல் பயிற்சி பட்டறை மற்றும் செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.


திருப்பூர்: அறிவியல் பயிற்சி பட்டறை மற்றும் செயல் விளக்க கருத்தரங்கில் விண்வெளி துறையின் சாதனைகளைப் பற்றியும், இந்தியா விண்வெளி துறையில் ஆற்றி வருகின்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பற்றியும் பள்ளி மாணவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.



உடுமலை அடுத்துள்ள முக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக அறிவியல் பயிற்சி பட்டறை மற்றும் செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், விண்வெளி துறையின் சாதனைகளைப் பற்றியும், இந்தியா விண்வெளி துறையில் ஆற்றி வருகின்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பற்றியும் பள்ளி மாணவர்களிடம் எடுத்துக் கூறினார்.

குறிப்பாக அறிவியல் என்பது கேள்வி கேட்பது என்று கூறினார். அதாவது ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்விகளை கேட்கும் போது மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன என்று பேசினார்.



அதனைத் தொடர்ந்து ராக்கெட் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய செயல் முறை பயிற்சி, பகல் நேர வானியல் பற்றிய செயல்பாடுகளை விளக்கம் அளித்து மாணவர்கள் தாங்களாகவே செய்தனர்.



மேலும் சூரிய கண்ணாடிகள் எவ்வாறு செயல்படுகின்றன, கிரகணங்கள் ஏற்படும் விதம் ஆகியவற்றை யும், நிலவின் சுவாரசிய தகவல்களையும் செயல்முறை மூலம் செய்து காண்பித்து விளக்கினார். ஆசிரியை இந்திரா தேவி நன்றி கூறினார்.



இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...