தமிழக தொழிலாளர்களுக்கு பின்னலாடை தொழிலில் ஈடுபாடு இல்லை - திருப்பூர் சக்திவேல் பேட்டி

தமிழகத்தில் இலவச அரிசி, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதன் மூலம், பின்னலாடை உற்பத்தி தொழிலில் அதிக ஈடுபாடு இல்லாததால் வட மாநில தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.


திருப்பூர்: நூல் விலை ஏற்றம் குறித்து தீர்வு காணும் வகையில் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நூல் மில் அதிபர்கள் மற்றும் பஞ்சு வியாபாரிகள் அடங்கிய கூட்டு கமிட்டியை ஏற்படுத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.



திருப்பூரில் வருகின்ற 12ஆம் தேதி 50 வது இந்திய சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி துவங்கப்பட உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு திருப்பூரில் நடைபெற்றது.

ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக தலைவர் திருப்பூர் சக்திவேல் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் உலக அரங்கில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் திருப்பூரை முன்னிலைப்படுத்தும் வகையில் திருப்பூரில் நடைபெற உள்ள ஐம்பதாவது இந்திய சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி அமையும்.

இதற்கான வரவேற்பு மிகச் சிறப்பாக இருக்கிறது. பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிலை தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் கூடிய வகையில் உற்பத்தி செய்து அதனை காட்சிப்படுத்த ஆயத்தை ஆடை கண்காட்சியை பயன்படுத்த இருக்கிறது.

இது ஏற்றுமதியாளர்களுக்கும்,வர்த்தகர்களுக்கு மட்டுமல்லாத உற்பத்தியாளர்களுக்கும் மிகச் சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம் கடந்த ஐந்து மாதங்களில் 14,000 கோடி அளவிற்கு நடைபெற்று இருக்கிறது. வரும் நாட்களில் அவை இன்னும் அதிகரிக்கும். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 10 முதல் 20% வரை அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது.

வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு தமிழக அரசு தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு இலவச அரிசி, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலமும், 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதன் மூலமாகவும் பின்னலாடை உற்பத்தி தொழிலில் அதிக ஈடுபாடு இல்லாததால் வட மாநில தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தக்கூடிய நூல் விலை ஏற்றம் குறித்து தீர்வு காணக்கூடிய வகையில் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நூல் மில் அதிபர்கள் மற்றும் பஞ்சு வியாபாரிகள் அடங்கிய கூட்டு கமிட்டியை ஏற்படுத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நூல் விலையை நிர்ணயிக்க வலியுறுத்த இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு தொழில் அமைப்பின் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...