குண்டடத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - குண்டடம் கோல்டு ஸ்டார் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது

குண்டடத்தில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.


திருப்பூர்: கிரிக்கெட் போட்டியில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணியினர் முதல் பரிசை வென்றனர். 2-ம் பரிசை தாராபுரம் சகாரா அணியினர் பெற்றனர். 3-வது பரிசை பல்லடம் மான்ஸ்டர் அணியினரும், 4-வது இடத்தை தாராபுரம் பிரண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.

குண்டடத்தில் திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. குண்டடம் கோல்டு ஸ்டார் கிரிக்–கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தாராபுரம், பல்லடம், திருப்பூர், உடுமலை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் அ.தி.மு.க. மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் முத்து வெங்கடேஸ்வரனும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமாரும், 3-ம் பரிசாக ரூ.7 ஆயிரம் பேரூராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜூம், 4-ம் பரிசாக ரூ.5ஆயிரம் குண்டடம் தொழிலதிபர் சத்தியசீலன் மற்றும் கோப்பைகளை குண்டடம் மணி, வெங்கி ஆகியோர் வழங்கினர்.

இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணியினர் முதல் பரிசை வென்றனர். 2-ம் பரிசை தாராபுரம் சகாரா அணியினர் பெற்றனர். 3-வது பரிசை பல்லடம் மான்ஸ்டர் அணியினரும், 4-வது இடத்தை தாராபுரம் பிரண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.



அதற்கான பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையை பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமார் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...