சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்த கார் - சிக்கித் தவித்தவரை பத்திரமாக போலீசார் மீட்டனர்

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார், காருக்குள் இருந்த சதீஷை பத்திரமாக மீட்டனர்.


கோவை: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை தேவனூர்புதூரைச் சேர்ந்தவர் விவசாயி சதீஷ். இவர் நேற்று மாலை சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் கதவை திறந்து வாய்கால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்த சதீஸை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.



இதனை தொடர்ந்து போலீசார் சூலூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் கிரேன் மூலம் வாய்காலில் பாய்ந்து விழுந்து கவிழ்ந்த காரை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.



இச்சம்பவம் சுல்தான்பேட்டை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...