கோவையில் கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் செயின் பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவையில் வீட்டின் முன்பு கோலமிட்டு கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்து 15 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


கோவை: மூதாட்டியிடம் தங்க நகையை பறித்து சென்றவர் யார் என சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஒண்டிப்புதூர், செந்தில் ஜனதா வீதியில் வசிப்பவர் கலைவாணி. இவர் இன்று உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்க சங்கிலியில் இணைக்கப்பட்டு இருந்த மணிகள் மற்றும் டாலர்களும் சேர்ந்து 17 சவரன் பறிபோனதாக பாதிக்கப்பட்டவர் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...