திருமூர்த்தி அணையில் புதர் மண்டி காணப்படும் பூங்கா - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை அருகே புதர் மண்டி காணப்படும் திருமூர்த்தி அணை பூங்காவை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணை வளாகத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.



குறிப்பாக இப்பகுதியில் பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி மலை அவணலிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.



இந்த நிலையில் திருமூர்த்தி அணைப்பகுதியில் கடந்து சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன.

பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விலங்குகள் மற்றும் இருக்கைகள் உபகரணங்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதால் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ள காரணத்தால் பூங்காவை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...