கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் உணவு, விவசாயம் குறித்த சர்வதேச கருத்தரங்கு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு மற்றும் விவசாயம் குறித்த சர்வதேச அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறையுடன், மலேசியா இன்டி சர்வதேசப் பல்கலைக்கழகம் இணைந்து, “உயிரி தொழில் நுட்பங்களின் அணுகு முறையில் உணவு, விவசாயம், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சார் அறிவியலில் நீடித்த நிலையான உயிர்வளங்கள்” என்ற சர்வதேச அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கம், கல்லூரி கலையரங்கில் தொடங்கியது.



இதன் தொடக்க விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். உயிரி தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் ஆர்.சுபாஷ்குமார் வரவேற்றார்.

மலேசியா இன்டி சர்வதேசப் பல்கலைக்கழக இணை துணை வேந்தர் முனைவர் வாங்லிங்சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார்.

புதுடெல்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை திட்ட அலுவலர் பிலால் அஹமது, மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுமைய வாழ்வு அறிவியல் விஞ்ஞானி முனைவர் கே.கதிர்வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அதைத்தொடர்ந்து, “நிலையான மேம்பாட்டில் உயிர் ளங்கள் மேலாண்மை”, “கோவிட்-19 பின்னர் உலக மக்கள் தொகைப் பெருக்கம், டி.என்.ஏ. தொழில்நுட்பத்தில் விவசாயம், மருத்துவத்துறைகள் வளர்ச்சி நிலைகள்”, “நுண் உயிரி தொழில் நுட்பவியல்”, “ஆரோக்கியம் சார் அறிவியல்” உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் அமர்வுகள் நடைபெற்றன.

இதில் 151 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...