உடுமலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பழம் தரும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

உடுமலையில் தனியார்-அரசு பள்ளிகள் மற்றும் ரோட்டரி அமைப்புடன் இணைந்து பழம் தரும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


திருப்பூர்: மரக்கன்றுகள் நடும் விழாவில் கோவில் வளாகம் மற்றும் பூங்காவளாகங்களில் பயன் தரும் பழம் தரும் விதைகள், செடிகள் நடவு செய்யப்பட்டன.

உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளி, உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி, வாசவி நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் உடுமலை தேஜஸ் ரோட்டரி அமைப்புடன் இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு நாள் நிகழ்வாக அனுஷம் நகர் விநாயகர் ஆலய வளாகம் மற்றும் பூங்காக்களில் பழம் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் டாக்டர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் லோகேஸ்வரி மற்றும் செயலர் சம்பத்குமார் முன்னிலையில் உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சேஷநாராயணன் வரவேற்று பேசினார்.

கோவில் வளாகம் மற்றும் பூங்காவளாகங்களில் பயன் தரும் பழம் தரும் விதைகள் மற்றும் செடிகள் நடவு செய்யப்பட்டன. இயற்கையை வணங்குவோம் என்ற தலைப்பில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் உரை நிகழ்த்தினார்.

கோவில் வளாகம் முழுவதும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி ஒருங்கிணைக்க உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட திட்ட அலுவலர் சுமதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஹம்சத் முகைதீன் நிகழ்வினை ஒருங்கிணைத்து மேற்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...