கோவை ரோட்டரி கிளப் சார்பில் 'மாயா' திட்டம் - குடிசைவாழ் மக்களுக்கு கண் சிகிச்சை முகாம்

கோவை ரோட்டரி கிளப்பின் டெக்ஸ் சிட்டியின் பிளாக்சிப் திட்டத்தின் கீழ் புதிதாக பெயரிடப்பட்ட மாயா திட்டத்தின் கீழ் குடிசைவாழ் மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சி நடந்தப்பட்டது.


கோவை: கோவையில் ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை ரோட்டரி கிளப்பின் டெக்ஸ் சிட்டியின் பிளாக்சிப் திட்டத்தின் குடிசைவாழ் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து முதன்மையான திட்டமான செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கபட்ட திட்டத்திற்கு மாயா என பெயரிடப்பட்டது.

கோவை சௌரிபாளையம் அண்ணாநகர் அருகே உள்ள குடிசைப் பகுதியில் இந்த மாயா திட்டம் நடைபெற்றது.

இந்த திட்டம் குடிசைப் பகுதி மிகவும் வளர்ச்சிக்கு உகந்த திட்டம்.



அங்கு மக்கள் உடல்நலம் மற்றும் பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள திட்டம் குடிசை வாழ் மக்களின் சுமைகளைக் குறைக்கும் முயற்சியாக, சுகாதாரப் பயனாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான நேரடி கண் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு மற்றும் கனவு உலகம் நிகழ்ச்சி, பாரம்பரிய விளையாட்டுகள், மர்மப் பெட்டி, மிஸ்டர் & மிஸ் மாயா போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ரோட்டரி கிளப் நடத்தியது.



பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், பொழுதுபோக்காகவும் இந்த மாயா திட்டம் அமைந்த்து.

முதியோர்கள் கண் சிகிச்சை முகாமின் மூலம் நிறைய பயனடைந்துள்ளனர். அங்கு முழுமையான கண் பரிசோதனை செய்து மேல் சிகிச்சை செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குழந்தைகள் முதல் முறையாக கனவு உலக நிகழ்ச்சியை பார்த்து மிகவும் உற்சாகமாக இருந்தனர். குழந்தைப் பருவத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க நினைவாக அமைந்தது. .

PACE அறக்கட்டளை மற்றும் IIVM யின் ரோட்ராக்ட் கிளப் இந்த நிகழ்வுக்கு பெரும் ஆதரவை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கபட்டது.



ஒட்டுமொத்தமாக, மற்ற திட்டங்களைப் போலவே மாயா திட்டம் டெக்ஸ்சிட்டி குழுவின் மிகவும் வெற்றிகரமான மற்றும் குறிப்பிடத்தக்க திட்டமாக அமைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...