வேளாண் தொழில் முனைவோருக்கு மானியம் - மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தொழிலநுட்ப வணிக காப்பகத்தில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்‌ முனைவோருக்கான மத்திய அரசின்‌ மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்திய அரசின்‌ வேளாண் மற்றும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ சார்பில் தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்‌ வணிக இயக்குனரகம்‌, தொழிலநுட்ப வணிக காப்பகத்தில்‌ 2019-ல்‌ இருந்து செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ இரண்டு பிரிவுகள்‌ மூலம்‌ மானியம்‌ வழங்கப்படுகின்றது.

புதிய வேளாண் தொழில்‌ முனைவோர்களுக்கான ரூ.5 இலட்சம்‌ வரையிலான மானியத்‌ தொகை, வேளாண்‌ துளிர்‌ நிறுவனங்களுக்கான ரூ 6 லட்சம் முதல் ரூ.25 இலட்சம்‌ வரையிலான மானியத்‌ தொகை, மத்திய அரசின்‌ வேளாண் மற்றும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ கீழ்‌ 2019 முதல்‌ 2022 வரை ரூ. 8.10 கோடி மானியம்‌ தொழில்நுட்ப வணிக காப்பகத்தின்‌ 70 தொழில்‌ முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்‌ வேளாண் மறறும்‌ விவசாய நலத்துறை அமைச்சகத்தின்‌ கீழ்‌ தேர்ந்தெடுக்கபட்ட புத்தொழில்‌ முனைவோர்கள்‌ மற்றும்‌ உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு 6 வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்‌ முனைவர்‌ கீதா லட்சுமி மானியங்களை வழங்கினார்‌. அப்போது அவர் பேசும் போது, "இளம்‌ பட்டதாரிகளை வேளாண்மை சார்ந்த தொழிலில்‌ ஈடுபடுத்துவது பெரிய சவாலாக உள்ளது. இது போன்ற மானியங்கள்‌, இளைஞர்களை வேளாண்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌, ஆராய்ச்சிகளை மேற்கொள்வதறகும்‌ மற்றும்‌ வேளாண்‌ தொழில்‌ மேம்படுத்துவதறகும்‌ ஊக்கம்‌ அளிக்க வேண்டும்‌" என வலியுறுத்தினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவா்‌ ஏ.சோமசுந்தரம்‌ வரவேற்புரையாறறினார்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அதிகாரி ஞானசம்பந்தம்‌ நன்றியுரை வழங்கினார்‌.



மேலும்‌ இவ்விழாவில்‌ பல்கலைக்கழக அதிகாரிகள்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நோ்முக உதவியாளர்‌ அகமத்‌, வேளாண் துணை இயக்குனர்‌ (வேளாண் வணிகம், விற்பனை) பெருமாள்சாமி மற்றும்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ மானியம்‌ பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ தங்கள்‌ மானியத்தை தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...