வால்பாறை அருகே கரடி தாக்கி 2 வட மாநில பெண்கள் படுகாயம் - மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கரடி தாக்கியதில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு வட மாநில பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.


கோவை: தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதியில் 38 வது தேயிலை தோட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். சுமார் 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் ஓடின.

அப்போது தேயிலைக்கு உரம் போட்டு கொண்டிருந்த சுமதி வயது 25 மற்றும் ஹித்தினி குமாரி வயது 26 ஆகிய இரண்டு பெண்களை கால் மற்றும் தலைப்பகுதியில் கரடி தாக்கியது. இதனைப்பார்த்த அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு விரட்டியதில் கரடி மீண்டும் வன பகுதிக்குள் ஓடி ஒளிந்துக்கொண்டது.

ரத்த வெள்ளத்தில் இருந்த இரண்டு பெண்களையும் அருகில் இருந்தவர்கள் தனியார் வாகனத்தின் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



இதில் ஒரு பெண்ணுக்கு தலையிலும், மற்றொரு பெண்ணுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



மேலும் மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் மேல் சிகிச்சைக்காக ஒருவருக்கு 10 ஆயிரம் வீதம் இருவருக்கு 20 ஆயிரம் வழங்கினார். தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...