குண்டடத்தில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி - எதுவும் சிக்காததால் திருடர்கள் ஏமாற்றம்

குண்டடம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடச் சென்ற மர்ம நபர்கள் வீடுகளில் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


திருப்பூர்: ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட முயன்ற மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டடத்தை அடுத்துள்ள சூரியநல்லூர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 75), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தோட்டத்திற்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. உள்ளே பணம், நகை ஏதும் வைக்கப்படாததால் ஏமாற்றத்துடன் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றிருந்தனர்.

இதே போல் சின்னாரிபாளையம் வேலுசாமி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அங்கும் ஏதும் கிடைக்காத நிலையில் உப்பாறு அணை சுண்டமந்தை அருகில் உள்ள நடராஜ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவின் பூட்டையும் உடைத்து அதிலிருந்த துணிமணிகளை எடுத்து வீட்டின் உள் பகுதியில் வீசியிருந்தனர். அங்கும் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.

இது பற்றிய தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...