உடுமலையில் கல்விக் கடன் வழங்க கோரி சென்ட்ரல் பேங்க் முன்பு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

உடுமலையில் மாணவனுக்கு கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த சென்ட்ரல் வங்கி முன்பு, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: கல்விக் கடன் வழங்காமல் ஒருவடத்திற்கு மேல் அலைக்கழித்துள்ளதால் மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணம நாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்த அமுத பாரதி என்ற மாணவன் கோவை கற்பகம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்விக் கடன் கேட்டு உடுமலையில் உள்ள சென்ட்ரல் வங்கியில் விண்ணப்பித்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் வங்கி நிர்வாகம் இன்று போய் நாளை வா இன்று போய் நாளை வா என தொடர்ந்து அலைக்கழித்துள்ளது.

இதனால் அந்த மாணவன் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.



இந்த நிலையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோருடன் 50க்கும் மேற்பட்டோர் சென்ட்ரல் வங்கியின் முன்பு கல்விக்கடன் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஒரு வருடத்துக்கு மேலாக கல்வி கடன் வழங்காமல் வங்கி நிர்வாகம் மாணவனுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே கல்விக்கடன் வழங்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...