வால்பாறை கலை கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

வால்பாறை கலை கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் போக்குவரத்து வட்டார அலுவலக போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.


கோவை: வாகனங்களை ஓட்டும் பொழுது வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் உட்பட சாலை போக்குவரத்து விதிகள் பற்றி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2000திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதற்கு போக்குவரத்து வட்டார அலுவலக போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் கல்லூரியில் சாலை விதிமுறைகளை பற்றி விழிப்புணர்வு கருத்து அரங்க கூட்டம் நடைபெற்றது.

இதில் மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சாலையில் வாகனங்களை ஓட்டும் பொழுது வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். 18 வயதிற்கு மேல் நிரம்பியவர் வாகனம் ஓட்டுநர் உரிமை வைத்திருக்க வேண்டும். சாலை விதியில் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கட்டாய தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் ஏற்றக்கூடாது.

வேக கட்டுப்பாடு அவசியம். ஒலி எழுப்பும் இடத்தில் ஒலி எழுப்ப வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. வாகனங்களை விளையாட்டாக ரேஸ் போன்றவை வைக்கக்கூடாது. இவைகள் அனைத்தும் உயிருக்கு கேடாக விளைவிக்கும் போன்ற விதிமுறைகளை பற்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...