மருதமலை மலைப்பாதை சீரமைப்பு - போக்குவரத்துக்கு தடை விதித்த கோவில் நிர்வாகம்

கோவை மருதமலை மலைப்பாதை பழுது நீக்கி செப்பனிடும் பணி நடைபெற இருப்பதால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: மருதமலை மலைப்பாதை சீரமைப்பு பணி நடைபெறுதால் போக்குவரத்துக்கு தடை விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மின் தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்குமிடம் ஆகியவற்றுடன் கூடிய மின்தூக்கி (LIFT) வசதி ஏற்படுத்தும் பணி, மலைச் சாலையில் உள்ள தார் சாலைகள் சீரமைத்தல் பணி, திருக்கோயிலின் மலை மேல் புதியதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணி, திருக்கோயிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் புதியதாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணி மற்றும் திருக்கோயில் தங்கரதம் உலாவரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணி ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.



இதனால் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு மலைப் பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்பதையும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் பேருந்து மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மருதமலை திருக்கோவில் நிர்வாக உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...