நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் - தேசிய நதி பாதுகாப்பு அதிகாரி ஆலோசனை

நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகத்தின் திட்ட இயக்குநர் அசோக்குமார் தலைமையில் கோவையில் நடைபெற்றது.


கோவை: நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து தேசிய நிதி பாதுகாப்பு இயக்குநர் கோவையில் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகத்தின் திட்ட இயக்குநர் ஜி.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, நீர்வளத்துறை தலைபொறியாளர் (திருச்சிமண்டலம்) சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் (கோவை மண்டலம்) சிவலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன். கோவிந்தன் உட்பட நீர்வளத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு செல்கிறது. இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 62.21 கிமீ. தூரத்திற்கு செல்லும் நொய்யல் ஆற்றின் குறுக்கே 17 அணைக்கட்டுகளும், 25 குளங்களும் அமைந்துள்ளன.

இதில் கழிவுநீர் கலக்கும் இடங்களை ஆய்வு செய்து அவற்றை தடுப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ள, தேசிய நதி பாதுகாப்பு இயக்குநாக திட்ட இயக்குனர் அசோக்குமார் நேற்றும் இன்றும் நொய்யல் ஆற்று ஆரம்ப பகுதி முதல் இருகூர் அணைக்கட்டு வரை ஆய்வு மேற்கொண்டார்.



அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கோயம்புத்தூர் மண்டலம் மற்றும் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சிறுதுளி அமைப்பினர் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கலந்தாய்வில் நொய்யல் ஆற்றினை மாசற்றதாக மாற்ற "நடந்தாய் வாழி காவேரி" திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...