லியோ டிரெய்லரை பார்த்து ரசித்த வானதி சீனிவாசன் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

நடிகர் விஜய் நடத்துள்ள லியோ திரைப்பட ட்ரெய்லரை தனது வீட்டில் பார்த்ததை பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவரது X சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


கோவை: லியோ டிரெய்லரை வானதி சீனிவாசன் பார்தது ரசித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவரது வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளார்.



இதன் புகைப்படத்தை வானதி சீனிவாசன் அவரது X சமூக வலைதள பக்கத்தில் LeoTrailer @Home என பகிர்ந்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...