தாராபுரம் நகரில் வாய்க்காலில் கழிவுகளை கொட்ட வேண்டாம் - பொதுமக்களுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

தாராபுரம் நகரில் உள்ள அமராவதி ராஜ வாய்க்காலில் நகர மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை கொட்டுவதால் அடைப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: ராஜவாய்க்கால்களில் குப்பை கொட்டும் நபர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுகொண்டனர்.

தாராபுரம் நகரில் உள்ள அமராவதி ராஜ வாய்க்காலில் நகர மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை கொட்டி வருவதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மதகுகள் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் உள்ளன என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் நகரின் மத்திய பகுதியின் வழியாக அமராவதி ராஜ வாய்க்கால் ஓடிக் கொண்டுள்ளது. இதன் மூலம் ராஜ வாய்க்காலில் இருந்து விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டுக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை ராஜ வாய்க்காலில் கொட்டி செல்கின்றனர். இதனால் ராஜ வாய்க்காலில் மதகுகளில் தண்ணீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டு விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் சீராக செல்லாமல் தடைபட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதேபோல ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மக்காத பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பாட்டில்கள் விவசாய விளை நிலத்தை பாதிக்கின்றன. எனவே மக்கள் இதனை கருத்தில் கொண்டு ராஜ வாய்க்காலில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ராஜவாய்க்கால்களில் குப்பை கொட்டும் நபர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...