கரும்பு, தென்னை பயிர்கள் கருகும் அபாயம் - அமராவதி அணை நீர் திறக்க கோரிக்கை

கரும்பு மற்றும் தென்னை பயிர்களை காப்பாற்ற உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: அமாரவதி அணை தண்ணீர் திறக்கப்படாமல் கரும்பு, தென்னை பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர் கரூர் மாவட்டங்களில் சுமார் 54,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பட்டு வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதியும் பெற்று வருகின்றன. பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், ஆற்று வழியாக பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படுகின்றது.

தற்போது புதிய ஆயக்கட்டு பாசனத்தில் விவசாயிகள் அதிக அளவு கரும்பு தென்னை நெல் பயிரிட்டுள்ளனர் இந்த நிலையில் தற்பொழுது போதிய தண்ணீர் கிடைக்காத காரணத்தால் கரும்பு தென்னை பயிர்கள் காய்ந்து வருகின்றன மேலும் கால்நடைகளுக்கும் நீர் தேவைப்படுவதால் அமராவதி அணையில் இருந்து 15 நாட்களுக்கு உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.



தண்ணீர் திறக்க காலதாமதம் ஆனால் கரும்பு, தென்னை, நெல் பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளதால் உடனடியாக உயிர்த்தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர் தற்சமயம் அமராவதி அணையில் மொத்த நீர்மட்டம் 90 அடியில் 67 அடியாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...