தண்ணீரில் மிதக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி - அச்சப்பட தேவையில்லை என கோவை ஆட்சியர் விளக்கம்

செறிவூட்டப்பட்ட அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் ஊறவைக்கும் போது சில அரிசி மிதந்தால் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: செறிவூட்டபட்ட அரிசி தண்ணீரில் மிதந்தால் அச்சப்பட வேண்டாம் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கடந்த மே மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியின் விகிதாசாரமானது 1:100 விகிதத்தில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகளை 100 கிலோ பொது விநியோகத்திட்ட புழுங்கல் மற்றும் பச்சரிசியுடன் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது.

மாவாக அரைக்கப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் -பி12 ஆகியவை கலந்து திரும்ப அரிசி குருணை வடிவில் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்பு சத்தினால் இரத்த சோகையினைத் தடுக்கவும், போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திற்கும், வைட்டமின்-பி12-ல் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் நன்மை ஏற்படுத்துகிறது.

மேற்படி செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்ட பொதுவிநியோகத்திட்ட அரிசி சமைப்பதற்கு தண்ணீரில் ஊற வைக்கும் போது, செறிவூட்டப்பட்ட அரிசி சில தண்ணீரில் மிதப்பதால் பொதுமக்கள் எவரும் அச்சப்பட தேவையில்லை. இவை அடர்த்தி மற்றும் எடை குறைவு காரணமாகதான் மிதக்கின்றன. எனவே, இவை ஊட்டசத்து நிறைந்தவை என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...