‌தாராபுரத்தில் ஒற்றுமை மேடை கூட்டம் - மத அடிப்படையில் மக்களை பாஜக பிளவுப்படுத்துவதாக புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் உத்தரவு போட்டு வருவதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வுக் கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மன்றத்தில் நடைபெற்றது.



இந்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தெனரசு தலைமையில் நடைபெற்றது. மக்கள் ஒற்றுமை மேடை கலந்தாய்வு கூடத்தில் அவர் பேசியபோது,

உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் உத்தரவு போட்டு வருகின்றனர். அதன் நோக்கம் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களே என நிறுவுவதற்குதான். அப்படி மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய துடிப்பதாகும்.



எனவே மக்கள் ஒன்றிணைந்து இதுபோன்று பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபடும் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் என பேசினர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், வழக்கறிஞர் திருப்பூர் மோகன், தாராபுரம் ஒருங்கிணைப்பாளர் கம்யூனிஸ்ட் கனகராஜ், விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல், தி.க வழக்கறிஞர் சக்திவேல், திராவிட கழகத்தைச் சேர்ந்த முனீஸ்வரன்,சண்முகம், படிப்பகம் ராஜாமணி, தீர்க்கதிர் இராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...