‌உடுமலையில் போக்குவரத்து விதிகளை மீறிய 38 வாகனங்கள் - ரூ.7 லட்சம் அபராதம் விதிப்பு

உடுமலை பகுதியில் கடந்த மாதத்தில் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் போக்குவரத்து விதிகளை மீறிய 38 வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து 7 லட்சத்து 16 ஆயிரத்து 700 ரூபாய் வசூலிக்கப்பட்டது.


திருப்பூர்: பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் இயக்கப்படும் வானங்களை கண்டறிந்து சிறை பிடித்து கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இணை போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் வாகன பரிசோதனையை மேற்கொண்டனர்.

அதன்படி உடுமலை வட்டார பகுதியில் செப்டம்பர் மாதத்தில் தொடர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 399 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் பல்வேறு குற்றங்களுக்காக 108 வானங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

தகுதி சான்று புதுப்பிக்காதது, சாலை வரி செலுத்தாதது, அனுமதி சீட்டு இல்லாதது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 38 வாகனங்கள் சிறை பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேற்கண்ட வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கிய வகையில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 200 மற்றும் அபராதமாக ரூ.7 லட்சத்து 16 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து முறைகேடாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் இயக்கப்படும் வானங்களை கண்டறிந்து சிறை பிடித்து கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...