அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி- கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு.

கோவை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கிய அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர், மேயர், துணை மேயர் ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர்.


கோவை: அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, 5000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், பொது மக்களிடையே உடல் தகுதி கலாச்சாரத்தை புதுப்பிக்கும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியானது ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் நிலையில் இந்த ஆண்டு கோவையில் இன்றைய தினம் நடத்தப்பட்டது.



நேரு ஸ்டேடியம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன் துவங்கிய இப்போட்டி, எல்ஐசி அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கை வந்தடைந்தது. . இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேயர் கல்பனா ஆனந்த்குமார், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர், பெண்களுக்கு 5 கிலோமீட்டர், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் முதல் பரிசாக 5000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2000 ரூபாய், நான்கு முதல் பத்து இடங்களில் வருபவர்களுக்கு தலா 1000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. ஓட்டப்போட்டியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரும் போட்டியாளர்களுடன் இணைந்து ஓடினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...