மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் - கோவையில் பிங்க் நிறத்தில் ஒளிர்ந்த ரேஸ்கோர்ஸ் மீடியா டவர்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கோவையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரேஸ் கோர்ஸ் பகுதியில் தாமஸ் பார்க் முழுவதும் பிங்க் வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டன


கோவை: நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வந்தால் மார்பக புற்று நோயை குணப்படுத்த முடியும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவர்கள் நம்மிக்கை தெரிவித்தனர்.

நகர்புற பெண்களுக்கு பெரும் பாதிப்பாக மாறி வருவது மார்பகபுற்றுநோய். இந்த நிலையில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கும் நிலையில், கோவையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில், இந்த மாதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன.



பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், ரேஸ் கோர்ஸ் பகுதியில் தாமஸ் பார்க் முழுவதும் பிங்க் வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டன.

ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையில், மீடியா டவரில் உள்ள திரையில் பிங்க் நிறத்தில் விழிப்புணர்வு படங்கள் ஒளிபரப்பட்டன. மார்பக புற்றுநோயைக் குறிக்கும் வகையில், நோயாளிகளின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக பிங்க் நிறம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

பிங்க் வண்ண ரிப்பன் உலகம் முழுவதும் மார்பக புற்றுநோயின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. மார்பக புற்றுநோயை வெற்றிகொள்வதில் எடுத்துவரும் முயற்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் அடையாளமாகவும் பிங்க் வண்ணம் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தை பிங்க் மாதமாக ( பிங்க் அக்டோபர்) அறிவித்துள்ளது.



அதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் பிங்க் நிறத்தில் அனைத்தும் பயன்படுத்தி விழிப்புணர்வு செய்யப்பட்டன. மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, கமிஷனர் பிரதாப், துணை ஆணையர் சந்தீஸ், மேற்கு மண்டல ஐஜி, துணை மேயர், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள், ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருந்திரையில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், மார்பக புற்று நோய் விழிப்புணர்வு இல்லாததனால், குணப்படுத்தக்கூடிய நோய்க்கு முறையான சிகிச்சை இல்லாததனால் பெண்கள் பரிதாமபாக உயிரிழக்கின்றனர். உரிய விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்படுத்தி மார்பக புற்றுநோய் பாதிப்பிலிருந்து காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டன.

நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வந்தால் இந்த நோய்க்கு தகுந்த சிகிச்சைகள் அளித்து குணப்படுத்திவிடமுடியும். வருடா வருடம் 5 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பக புற்றுநோயால் இறக்கிறார்கள். நம்பிக்கை அளிக்கும் செய்தி என்னவென்றால், ஆரம்ப நிலை புற்றுநோய்களில் 90 சதம் குணப்படுத்திவிடக் கூடியவை.

பாதிப்பு அதிகாமாக உள்ள அயல்நாடுகளில் ஆரம்பத்திலேயே கண்டறிவதனால் இறப்பு பெருமளவில் தடுக்கப்படுகின்றன. ஆனால் நம் நாட்டில் பாதிப்பு குறைவான நிலையில், போதுமான விழிப்புணர்வின்றி பெண்கள் பரிதாபமாக பலியாகின்றனர். பெண்கள் உரிய பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியாமாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...