வரும் 16ம் தேதி சென்னையில் உண்ணாநிலை - தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கோரிக்களை நிறைவேற்றாவிட்டால், வரும் 16ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



பீக் அவர் உட்பட தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த மாதம் கோவை காரணம்பேட்டை பகுதியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட அவர்கள் தொடர்ந்து முதலமைச்சருக்கு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி கடிதங்களை அனுப்பினர்.

கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கதவடைப்பு போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.



கோவையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தலைமை வகித்தார்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கருப்பு பேட்ச் அணிந்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இல்லையெனில் வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்திருந்த அனைவரும் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்திக்க வேண்டும் என தெரிவித்ததால் காவல்துறையினர் அவர்களை ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலையும் காவல்துறையினர் அடைத்ததால் தொழில் அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முக்கிய நிர்வாகிகள் சுமார் 20 பேர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...