தாராபுரத்தில் இறைச்சிக் கடைக்குள் கார் புகுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: கட்டுப்பாட்டை இழந்து இறைச்சிக்கடைக்குள் கார் புகுந்த விபத்தில் இறைச்சி வாங்க நின்றிருந்தவர் உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-உடுமலை சாலை கொண்டரசன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இறைச்சிக்கடை நடத்தி வருபவர் தமிழரசன் (39). இவர் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் தனது கடையில் இறைச்சி வியாபாரத்தை கவனித்து வந்தார்.



அப்போது தளவாய்பட்டினம் இருந்து தாராபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த (மாருதி 800) கார், இருசக்கர வாகனத்தின் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சிக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சென்ற தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், காரை ஓட்டி வந்தவர் தளவாய்பட்டினத்தை அடுத்த ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (42) என்பதும், இவர் தாராபுரத்தை நோக்கி காரில் வந்து கொண்டிருக்கும்போது கொண்டரசம்பாளையம் பகுதியில் சேர்ந்த அருணகிரி (55) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் இறைச்சி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இவ்விபத்தில் இறைச்சிக் கடையின் உரிமையாளர் தமிழரசன்(39), கடையில் பணியாற்றி வந்தவர் மீதுன்பாலாஜி(17), இறைச்சி வாங்குவதற்காக கடையில் நின்று கொண்டிருந்தவர் பிரகாஷ்(38) ஆகியோர் காயமடைந்தனர்.



தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிரகாஷ் தாராபுரம் அரசு மருத்துவமனை அழைத்து செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



மேலும் படுகாயம் அடைந்த தமிழரசன், மிதுன்பாலாஜி, அருணகிரி, செல்வராஜ் ஆகியோருக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மேற்கொண்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் இறைச்சி கடைக்குள் புகுந்த காட்சிகளை வைத்து போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...