திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் குமரலிங்கத்தில் நடைபெற்றது

உடுமலை அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருப்பூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: பாமகவின் சாதனைகள் மற்றும் கொள்கைகள் குறித்து வீடு வீடாக பொது மக்களுக்கு தெரிவிப்பது, கிராமங்கள் தோறும் பாமக கொடி ஏற்றுவது, திண்ணைப் பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து உட்பட பல்வேறு தீர்மானங்கள் பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருப்பூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவின் சாதனைகள் மற்றும் கொள்கைகள் குறித்து வீடு வீடாக பொது மக்களுக்கு தெரிவிப்பது, திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் கிராமங்கள் தோறும் பாமக கொடி ஏற்றுவது, பாமகவின் கொள்கைகளை வீடுதோறும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முன்னதாக குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் பஸ் நிறுத்தும் பகுதியில் பாமக கட்சி கொடியினை மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் பாஸ்கரன் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் நிகழ்வில் உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், அமைப்பு செயலாளர் மனோகர், குமரலிங்கம் பேரூராட்சி செயலாளர் மாரிமுத்து உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ பாலு, குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் உட்பட ஒன்றிய பேரூர் நகர பாமக நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...