திருப்பூரில் தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடிப்பு - 5 பேர் காயம்

திருப்பூரில் தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடித்து சிதறிய விபத்தில் படுகாயமடைந்த 5 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடித்து சிதறிய விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் பாராபாளையம் அடுத்த வடக்கு தோட்டம் பகுதியில் ஜெயரத்தினம் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மங்களூரைச் சேர்ந்த பிரதீப் செட்டி. இந்த நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டனர். அப்பொழுது, அயனிங் செக்சன் இன்சார்ஜ், மணிகண்டன் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் உற்பத்தி செய்த பனியன்களை அயன் செய்வதற்காக அயனிங் பாயிலரை ஆன் செய்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக அயனிங் பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் கண்ணதாசனுக்கும், குமார் வலது புறம் நெத்தியில அங்கு பணியாற்றிய வட மாநில தொழிலாளி பாபு நரேன் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

மணிகண்டன் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். மேலும் அருகில் இருந்த இரண்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றிய மற்ற தொழிலாளர்கள் காயம் பட்டவர்களை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக திருப்பூர் மத்திய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...