நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 57 வது நாளாக தமிழ்நாடு அரசு கவன ஈர்ப்பு விதமாக பிணம் போல் வேடமிட்டு ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 திருப்பூர்: நல்லதங்காள் அணைக்கட்டிற்கு கட்டுமான பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமைச் செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கட்டுவதற்காக தமிழ்நாடு அரசால் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்த பின் அங்குள்ள விவசாயிகளுக்கு நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும் மானாவாரிய இடத்திற்கு சுமார் 50,000 வரை வழங்குவதாக கூறி உரிய பணம் வழங்காமல், குறைந்த அளவிலேயே பணம் வழங்கி விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இன்று வரை 26-ஆண்டுகள் கடந்த பின்பும் இன்று வரை அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கோரி, மேலும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும் மானாவாரிய இடத்திற்கு சுமார் 75-ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று வரை இழப்பை இட்டுத்தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் 57-ஆம் நாளாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



57-நாட்களாக கடந்தும் இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை நல்லதங்காள் அணைக்கு நிலம் வழங்கிய விஜயன் என்பவர் இறந்த பிணம் போல வேடமிட்டு அவர் இறந்து விட்டதாக கருதி பெண்கள் ஒப்பாரி இட்டு (இறந்த இல்லம்) இல்லத்தில் நடைபெறும் சடங்குகள் போல் நெத்தியில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து தலைக்கு துண்டு கட்டி வெள்ளை வேஷ்டி விரித்து பாடை கட்டி வைத்து நாற்காலியில் அமர வைத்து பெண்கள் ஒப்பாரி இட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை அக்டோபர் 10-ஆம் தேதி காலை நல்லதங்காள் அணைக்கட்டிற்கு கட்டுமான பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை தலைமை செயலாக்கம் முன்பு உண்ணாவிரதம் போராட்டத்தில்ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...