தாராபுரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு மாரத்தான் - ஏராளமானோர் பங்கேற்றனர்

தாராபுரம் உட்கோட்டம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் வேக நடை போட்டி நடைபெற்றது.


திருப்பூர்: தாரபுரத்தில் நடைபெற்ற தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு மாராத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் தாராபுரத்தில் தமிழ்நாடு காவல்துறை தாராபுரம் உட்கோட்டம் சார்பில் மினி மராத்தான் வேக நடை போட்டி நடைபெறறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். மினி மராத்தான் போட்டியை போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் தொடங்கி வைத்தார். அதில் வேக நடை போட்டி 16 வயதுக்கு உட்பட்டவர்கள், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. வேக நடை போட்டி தாராபுரம் காவல் நிலையம் முன்பு தொடங்கி பூக்கடை கார்னர், ஐந்து சாலை சந்திப்பு, அரசு மருத்துவ மனை, தாசில்தார் அலுவலகம் வழியாக காவல் நிலையம் வந்து அடைந்தனர்.



இந்த போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.750, மூன்றாம் பரிசு ரூ.500 அறிவிக்கப்பட்டது. அதே போன்று 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.2000, இரண்டாம் பரிசு ரூ.1000, மூன்றாவது பரிசு ரூ. 500 அறிவிக்கப்பட்டது. அத்தடன் மேலும் இரண்டு பிரிவுகளிலும் முதல் பத்து இடங்களை பிடிப்பவர்களுக்கு மெடல் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர். இந்த போட்டியை தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

16 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் அகரம் பள்ளியை சேர்ந்த மாணவர் ஹரிஹரன், ஹரி சரண், தீபக் ஆகியோர் முதல் மூன்று இடஙகளை பிடித்தனர். அடுத்து 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில். முகமது வாசர் மற்றும் அம்ருத், முகமது தபிக் மற்றும் நவீன் ராஜ், போல்ராம் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும் இரண்டு பிரிவுகளலும் முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...