தாராபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை பணி - நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தொடங்கி வைப்பு

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நகரப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


கோவை: நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பொது நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் என நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நகரப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,

தாராபுரம் நகராட்சி 4-வது வார்டு பகுதியில் பல ஆண்டு காலமாக மக்கள் சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பொது நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் என அவர் கூறினார்.

அப்போது நகர்மன்ற உறுப்பினர் ராஜாத்தி பாண்டியன், 4-வது வார்டு செயலாளர் ரவிச்சந்திரன், வார்டு அவைத்தலைவர் சென்னியப்பன், வார்டு பிரதிநிதிகள் ஆறுச்சாமி, மகாலட்சுமிரத்தினம், வாக்குச்சாவடி முகவர் குணசேகரன், பெரியசாமி, பாலகிருஷ்ணன், முனியப்பன், ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...