முறையான சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரந்ததாக புகார் - தாராபுரம் அரசு மருத்துவமனை முற்றுகை

தாராபுரம் அரசு மருத்துவமனையில் 27-வயது வாலிபருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை உறவினர்கள் முற்றுகையிட்டனர்



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியம் முத்தையம்பட்டி பகுதியைச் சேர்ந்த வல்புராணின் மகன் ரஞ்சித்(27) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது தந்தை வல்புரான் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் உயிரிழந்துவிட்ட நிலையில் குண்டடம் அருகே உள்ள ஜோதியம்பட்டி பகுதியில் ரஞ்சித் தனது சகோதரி புதிதாக இல்லத்தை கட்டி வருகிறார்.

இன்னும் எட்டு தினங்களில் தனது சகோதரியின் இல்லம் கிரக பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் ரஞ்சித் தனது சகோதரிக்கு உதவிகள் செய்து வந்துள்ளார் புதிதாக கட்டப்பட்டு வரும் இல்லத்தின் பணிகளை கவனித்து வந்தார். அப்போது திடீரென ரஞ்சித்திற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக சகோதரியின் கணவர் பெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளித்த பின் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து அனுமதித்தனர்.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்ட ரஞ்சித்க்கு இரவு திடீரென ரஞ்சித்திற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் தெரிவித்தும் எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் அலட்சியத்துடன் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் திடீரென காலை மீண்டும் ரஞ்சத்திற்கு மூச்சுற்று திணறல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



உயிரிழந்த ரஞ்சித்தின் உறவினர்கள் முறையாக செயற்கை ஆக்சிஜன் சுவாச சிலிண்டர்கள் வைத்திருந்தால் ரஞ்சித் உயிருடன் இருந்திருப்பார் என்று தெரிவித்து மருத்துவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த ரஞ்சித்தின் உறவினர் கூறுகையில்: இரவு செயற்கை ஆக்சிஜன் சிலிண்டர் முடிந்து விட்டது என்று தெரிவித்த போது சிலிண்டர் வைப்பு அறையின் சாவி எங்களிடம் இல்லை என்று செவிலியர் அலட்சியமாக கூறியதாக தெரிவித்தனர்.

மேலும் அரசு மருத்துவமனைக்குள் ஒரு தலை பட்சமாக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பேசுவதாகவும் தெரிவித்தார் மேலும் முறையாக சிகிச்சை அளித்து இருந்தால் ரஞ்சித் உயிருடன் இருந்திருப்பார் என கண்ணீர் மல்க தெரிவித்தார் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது உடனடியாக தமிழ்நாடு அரசு தலையிட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை முறையாக பணியாற்றுகிறார்களா ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இச்சம்பவத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...