உடுமலையில் மாற்றுத்திறனாளி பணி நீக்கம் - பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

உடுமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவராஜ் என்பவர், சுகாதார துறையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றிய தன்னை பணி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


கோவை: தன்னை பணி நீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், எனவே தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சிவராஜ். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதல், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார துறையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் தன்னை சமீபத்தில் பணி நீக்கம் செய்துள்ளனர்.

தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய தன்னை பணிநீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், ஏற்கனவே தனது பணி தொடர்பாக வழக்கு தொடர்ந்து அதற்கான நீதிமன்ற தடையாணை இருக்கும் நிலையில், தற்சமயம் தன்னை பணி நீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், எனவே தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...