உடுமலை அருகே பேருந்து நிறுத்தப்படாததற்கு கண்டனம் - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் அம்மாபட்டி பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்படாத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் அம்மாபட்டி பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்படாத காரணத்தினால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை கண்டித்து கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் மூர்த்தி தொழிலாளர் நல வாரிய தலைவர் குணசேகரன் தலைமையில் திருப்பூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...