திருச்செந்தூர் குழந்தை கடத்தல் - கடத்தி சென்ற பெண் உயிரிழப்பு?

திருச்செந்தூரில் ஒன்றரை வயது குழந்தை திருடப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளான கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: திருச்செந்தூரில் குழந்தையை திருடியாதாக ஒப்புகொண்ட கணவன், மனைவி கைது.

கடந்த 5ம் தேதி திருசெந்தூர் வடக்கு டோல்கேட் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் ஒன்றரை வயது திருடப்பட்டது குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போலிசார்க்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குழந்தையை திருடியவர்கள் கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் இருப்பதாக தெரியவந்ததன் பேரில் உடனடியாகக் கோவை ஆலாந்துறை போலிசார்க்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் ஆலாந்துறை போலிசார் பூண்டி சாலை முட்டதுவையல் குளத்தேரி பகுதியில் இருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(43), திலகவதி(35) தம்பதியை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியாதாக ஒப்புகொண்ட நிலையில் குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறிய நிலையில் தற்போது காவல்துறையினர் சேலம் விரைந்துள்ளனர். மேலும் திருச்செந்தூர் காவல்துறையினரும் சேலம் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் திலகவதி தற்போது உயிரிழந்துள்ளார். விசாரணையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே குழந்தை கடத்தல் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...