சில்லறை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஆவின் ரூ.10 பால் பாக்கெட் அறிமுகம்

பொதுமக்களுக்கு நிலவும் சில்லரை பிரச்னைக்கு தீர்வு காண, 10 ரூபாய்க்கு, 200 மில்லி ஆவின் பால் பாக்கெட் கோயம்புத்தூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பத்து ரூபாய்க்கு பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்திய ஆவின் நிர்வாகம்

கோயம்புத்துார் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மூலம், நாளொன்றுக்கு, 1.5 லட்சம் லிட்டர் முதல், 2 லட்சம் லிட்டர் வரை பால் விற்கப்படுகிறது. ஊதா, பச்சை, ஆரஞ்ச் என பல வண்ணங்களில் பால் பாக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

பாலில் உள்ள கொழுப்புச்சத்து மற்றும் இதர சத்துகளுக்கு ஏற்ப, விலை வித்தியாசம் இருக்கிறது.'ஆவின் டிலைட்' என்ற பால் வகை, 250 மி.லி., பாக்கெட் ரூ.11.50க்கு விற்கப்பட்டு வந்தது. கடைகளில், 50 காசுகள் கூடுதலாக வைத்து, ரூ.12க்கு விற்கப்படுவதாக, ஆவின் நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சில்லரை பிரச்னை எழுவதாக, ஏஜன்ட்டுகள் மழுப்பினர். பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்க, 200 மி.லி., பாக்கெட் தயாரித்து, 10 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பால் பாக்கெட் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆவின் அதிகாரிகள் கூறுகையில், '250 மி.லி., பால் பாக்கெட் ரூ.11.50க்கு விற்கப்பட்டது; 12 ரூபாய் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதற்கு தீர்வு காண, 10 ரூபாய் பாக்கெட் அறிமுகப்படுத்துகிறோம்.

இனி, சில்லரை பிரச்னை எழாது. 50 மில்லி குறைத்து, 200 மி.லி, பாக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பாலில் உள்ள சத்துக்கள் குறைக்கப்படவில்லை. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூ.9.60க்கு வழங்கப்படும். இந்த மாதத்துக்கு கூடுதலாக செலுத்திய தொகை, அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும்' என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...