ஆபத்துக் காலத்தில் முதலுதவி - மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புத்துறையினர்

நரசிம்மநாயக்கன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து காலத்தில் முதலுதவி செய்வது குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: தீ விபத்து ஏற்படும் போது மாணவர்கள் செய்ய வேண்டிய செயல்முறை விளக்கம் குறித்து கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், துடியலூர் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தம்பு மேல்நிலைப்பள்ளி இணைந்து நாட்டு நல பணி திட்ட முகாமை நடத்தியது.

பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர், ஆபத்து காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலுதவி குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.

இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், மயக்கமடைந்த நபரை எவ்வாறு மீட்பது, விபத்து காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள், தீயை எவ்வாறு பாதுகாப்பாக அணைப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...