உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

அடிப்படை தேவைகளை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் என கவுன்சிலர்கள் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: ஒன்றிய குழு பெருந்தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்ததால் உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய சாதரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகளை ஒன்றியகுழு கவுன்சிலர்கள் தெரிவித்தனர் குறிப்பாக ஓன்றிய பெருந் தலைவர் மகாலட்சுமி முருகன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் துவக்க விழாவுக்கு செல்வதாகவும் பெரும்பாலான பகுதிகளுக்கு வருவதில்லை எனவும், ஒன்றிய குழு தலைவருக்கு தெரியாமலே தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

மேலும் ஒன்றிய பெருந் தலைவர் பயன்படுத்தும் அரசு வாகனம் பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் வாகனம் ஓடுவது போல் கணக்கு காட்டி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது எந்த வேலைக்குச் சென்றாலும் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் கேட்பதாகவும் தெரிவித்தனர்.



மேலும் கணக்கம்பாளையம், ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி உட்பட பல்வேறு ஊராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் ஓன்றிய குழு உறுப்பினர்களுக்குகூட நலத்திட்டங்கள் குறித்து தகவல் சொல்வதில்லை எனவே அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஒன்றிய பெருந்தலைவர், அதிகாரிகள் முன்வர வேண்டும் இல்லையெனில் பொதுமக்களை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவது என ஒன்றிய குழு கவுன்சிலர்கள் தெரிவித்ததால் உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...