கலைஞர் கருணாநிதி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

திருப்பூர் அருகே உள்ள நீர் நிலை தன்மை கொண்ட நிலங்களை மீட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க கோரி சென்னை தலைமை செயலகம் முன்பாக வரும் 12ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக நஞ்சராயான் குளம் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்துள்ளனர்


திருப்பூர்: நீர்நிலைத் தன்மை கொண்ட நிலங்களை மீட்க வேண்டும். அதில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து நஞ்சராயான் குளம் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய குளமான நஞ்சராயன் குளம் 440 ஏக்கரில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு 800 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இந்த குளத்தில் 157 வகை பறவை இனங்களும் 40 வகை பட்டாம்பூச்சிகளும் 76 வகை தாவரங்களும் 11 வகை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் 16 வகை பூச்சிஇனங்களும் வாழ்விடமாகவும், வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து செல்லும் இடமாகவும் விளங்கி வருகிறது.

இதனிடையே நஞ்சராயன் குளத்தை 17வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆட்சி காலத்தில் இந்த குளத்தை ஒட்டி உள்ள தனியார் பள்ளிக்கு முறைகேடாக வழங்கிய 8.90 ஏக்கர் நீர்நிலைத் தன்மை கொண்ட நிலங்களை மீட்க வேண்டும். அதில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னையில் தலைமை செயலகம் முன்பு வரும் 12ம் தேதி முதல் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...