ஈரானிய திருட்டு கும்பல் கைது - நகை, பணத்தை பறிமுதல் செய்து கோவை போலிசார் அதிரடி

சூலூரில் இருசக்கர வாகனத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசில் சிக்காமல் போக்கு காட்டி வந்த ஈரானியத்தை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்த போலீசார்  2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகை கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஈரானியர்களை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் இருந்து வரும் முருகன் கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மறுமணவர் ஒருவர் கோவிலின் அலுவலக அறையை உடைத்து அலுவலகத்திற்குள் உள்ளே இருந்த மேஜை டிராவை உடைத்து அதிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். அதே நாளில் மலுமிச்சம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு தங்க நகையை கொள்ளையடித்து சென்ற இளைஞரை சூலூர் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இரு வேறு திருட்டுகளில் ஈடுபட்ட நபர்களை கண்ணம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



விசாரணையில் இரு வேறு இடங்களில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் என்பது தெரிய வந்தது பின்னர் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து இருவரிடம் விசாரணை செய்தபோது யூனுஸ் உசேன் மற்றும் சமீர் என்பதும் தெரிய வந்தது பின்னர் இருவரிடமும் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணம் மற்றும் நான்கு சவரன் நகை திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மீட்கப்பட்டு பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மோகல் ஜாபர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...