தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை - பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


திருப்பூர்: மாலை நேரத்தில் 3 மணிநேரம் வரை பெய்த மிதமான மழையால் தாராபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குண்டடம், தளவாய்பட்டினம், அலங்கியம், மேட்டுக்கடை, கன்னிவாடி, சீதப்பட்டி, பள்ளப்பட்டி பிரிவு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது.

இந்நிலையில், மதியம் வரை வழக்கம்போல் வெயில் வெளுத்து வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.



அதைத் தொடர்ந்து மாலை வானில் கருமேகங்கள் கூடின. பின்னர் சுமார் 3-மணிநேரம் பெய்த மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தாராபுரம் வட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...