நிலத்திற்கு இழப்பீடு கேட்டு சென்னைக்கு புறப்பட்ட விவசாயிகள் தடுத்து நிறுத்தம் - தாராபுரத்தில் பரபரப்பு

நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட செல்வதற்காக தயார் நிலையில் இருந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.


திருப்பூர்: கோனேரிப்பட்டி பிரிவு அருகே உள்ள போராட்டத் பந்தலில் இருந்து சென்னை செல்வதற்கு தயார் நிலையில் வந்து இருந்த விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் 09.10.2023 தேதி வரை 58-வது நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 08.10.23 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் பிணம் போல் நடித்து பாடை கட்டி ஒப்பாரி வைத்துப் போராட்டம் நடத்திய பின்பு 10-ம் தேதி காலை சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.



இந்நிலையில் இன்று கோனேரிப்பட்டி பிரிவு அருகே உள்ள போராட்டத் பந்தலில் இருந்து சென்னை செல்வதற்கு தயார் நிலையில் வந்து இருந்த விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



இந்நிலையில் போராட்ட பந்தலில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலையில் முக்காடுயிட்டு தங்களை சென்னைக்கு அனுப்பாமல் தடுத்து நிறுத்தும் காவல்துறையினரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் விவசாயி பாலசுப்பிமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கப்பட்டது. இந்நிலத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்குகளும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தீர்ப்புகள் வழங்கப்பட்டது.

இன்று வரை தமிழ்நாடு அரசு நீதிமன்ற தீர்ப்புக்கும் பதில் அளிக்காமல் விவசாயிகளின் நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. இதனால் கடந்த 58-நாட்களாக நடைபெற்று வந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் வருகின்ற 10-ம் தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில் இன்று சென்னை செல்வதற்காக போராட்ட பந்தலுக்கு தயார் நிலையில் வந்திருந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இந்திய நாட்டிற்கு நள்ளிரவு 12-மணிக்கு சுதந்திரம் கிடைத்தது போல ஆனால் இன்று வரை நல்லதங்காள் நேர்த்தக ஓடைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லையா என சந்தேகம் எழுந்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.

மேலும் நல்லதங்காள் விவசாயிகள் நள்ளிரவு ஒரு மணி அளவில் கூட விவசாயிகளுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். தலைமைச் செயலகம் பொதுமக்களின் சொத்து தலைமைச் செயலகத்திற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் விவசாயிகள் செல்வதை எதற்காக தடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை சென்னை செல்வதை தடுத்து நிறுத்திய 30-க்கும் மேற்பட்ட போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...