நாட்டை காப்போம் கூட்டமைப்பு சார்பில் தாராபுரத்தில் சட்ட விழிப்புணர்வு மாநாடு கலைக்குழு பிரச்சாரம்

தாராபுரம் அண்ணா சிலை அருகே நாட்டை காப்போம் புதுமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சியில், நாட்டுப்புற கலைஞர்களின் கலை மாமணி விருது பெற்ற கலாராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாட்டை காப்போம் கூட்டமைப்பு நடத்தும் இந்திய அரசமைப்பு சட்ட விழிப்புணர்வு மாநாடு வருகின்ற 17ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.



இதனுடைய வரவேற்பு நிகழ்ச்சி மதுரை தமிழ் மலர் கலைக்குழுவினர் சார்பில் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அண்ணா சிலை அருகே நாட்டை காப்போம் புதுமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.



இந்நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை மாமணி விருது பெற்ற கலாராணி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கனகராஜ் பொன்னுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து முருகானந்தம், வழக்கறிஞர் சக்திவேல் மற்றும் முனீஸ்வரன், சண்முகம், ராசாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...