பல்லடத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்து - குழந்தை உட்பட 10 பேர் காயம்

பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில், பத்து பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தும் வகையில் பேருந்து வேகமாக இயக்கி வந்ததே விபத்திற்கு காரணம் என பேருந்தில் பயணித்த பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



பொள்ளாச்சியில் இருந்து தேனி நோக்கி பல்லடம் வழியாக வந்த அரசு பேருந்தும், கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும் ஓட்டுனரின் கவனக்குறைவால் பேருந்து நிலையம் முன்பு சாலையை கடக்க முயன்ற போது மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் காயமடைந்த பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பேருந்து நிலையம் முன்பு நிகழ்ந்த இந்த விபத்தால் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய பேருந்துகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறு காயங்களுடன் குழந்தைகள் உட்பட 10 பயணிகள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



பொள்ளாச்சியில் இருந்து வந்த ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தும் வகையில் பேருந்து வேகமாக இயக்கி வந்ததே விபத்திற்கு காரணம் என பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...