தேசிய அஞ்சல் வாரம் - கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கேக் வெட்டி ஊழியர்கள் கொண்டாட்டம்

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கேக் வெட்டி ஊழியார்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு அடுத்த ஒரு வாரத்திற்கு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் அஞ்சல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு "நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்" என்ற தலைப்பில் அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கோவையில் உள்ள வெவ்வேறு அஞ்சல் அலுவலகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தபால் தலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அஞ்சல் அலுவலகம் வந்திருந்தனர்.



இவர்கள் அஞ்சல் துறையினர் செயல்பாடுகள், அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தபால்தலைகளை பார்வையிட்டனர்.



மேலும் அஞ்சல் ஊழியர்கள் கேக் வெட்டி, கோலமிட்டு கொண்டாடினர். அஞ்சலக ஊழியர்கள் மாணவர்களுக்கு அஞ்சல் உறைகளை வழங்கி கடிதம் எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பது குறித்து தெரிவித்தனர்.

அடுத்த ஒரு வாரத்திற்கு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...