தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க வேண்டும் - கோவையில் சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு அளவு கணக்கிடப்படும் நிலையை மாற்றி மாதம்மாதம் கணக்கீடு எடுக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், "சுமார் 1000 சதுரடி வரை வணிக நோக்கத்தோடு கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அதற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வர வேண்டும், சுமார் ஆறு அல்லது எட்டு வீடுகள் வரை உள்ள கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு கொடுப்பதற்கு விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு அளவு கணக்கிடப்படும் நிலையை மாற்றி மாதம்மாதம் கணக்கீடு எடுக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இயக்கத்தின் தலைவர் சாக்ரடீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கும் வணிக கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு வழங்குவதில் நீதிமன்ற தடை இருப்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாகவும் தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...