உடுமலை காவல் நிலையங்களில் கோவை சரக டி ஐ ஜி திடீர் ஆய்வு செய்ததால் பரபரப்பு

உடுமலை உட்கோட்ட காவல் சரக பகுதியில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி ஆ.சரவணசுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி.

உடுமலை காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அத்துடன் வழக்குகளின் நிலைகளை கேட்டறிந்தார். மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்கண்ணன், வெங்கடேஷ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், சரவணக்குமார், சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் உடன் வந்தனர். டி.ஐ.ஜி திடீர் ஆய்வால் உடுமலை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...