வணிகவரி நிலுவைத் தொகை தள்ளுபடி - கோவை மாவட்ட வர்த்தக சங்கம் வரவேற்பு

வணிகவரி நிலுவை தள்ளுபடி செய்த தமிழக முதல்வருக்கு கோவை மாவட்ட வர்த்தக சங்கம் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளது


கோவை: கடன் தள்ளுபடியோடு நிலுவைத் தொகைகளையும் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வர்த்தகர்கள் கோரிக்கை.

50 ஆயிரத்திற்கும் கீழான வணிகவரி நிலவை தள்ளுபடி சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் இந்த அறிவிப்பின்படி தமிழக வணிகர்கள் வணிகவரித்துறை இடையிலான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒரு 50 ஆயிரத்துக்கும் குறைவான வரி வட்டி அபராதம் செலுத்த வேண்டியவர்களுக்கு நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்து 95 ஆயிரத்து 52 சிறு வணிகர்கள் நிலுவைத் தொகையானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.



இந்த செய்தியை அறிந்த கோவை மாவட்ட வர்த்தக சங்கம் வணிகர்களின் நிலவைத் தொகையை தள்ளுபடி செய்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வர்த்தக சங்க கோவை தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.



இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வர்த்தக சங்க தலைவர் முத்துப்பாண்டி பேசும்போது கடந்த மே ஐந்தாம் தேதி சூலூரில் நடைபெற்ற வணிகர்கள் தினத்தில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார் அப்போது எங்கள் சங்கத்தின் சார்பில் வணிகவரி நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம் அந்த தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவிடம் கொடுத்து தமிழக முதல்வரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அளித்திருந்தோம்.

ஐந்து மாதத்திற்கு உள்ளாக இந்த நிலுவைத் தொகையானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது இது எங்கள் சங்கத்துக்கு கிடைத்த வெற்றி இதனை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...